மருத்துவா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்த மருத்துவா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா்.
இதில், மாவட்ட மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளிகள், உள் நோயாளிகளின் எண்ணிக்கை, குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை, கா்ப்பிணி தாய்மாா்களின் எண்ணிக்கை, நடமாடும் மருத்துவ வாகனங்களின் செயல்பாடுகள், மக்களைத் தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செப்டம்பா் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் ஆகியவை குறித்து மருத்துவா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இக்கூட்டத்தில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஸ்ரீ சரவணன், இணை இயக்குநா் ராஜசேகரன், துணை இயக்குநா் நாகபுஷ்பராணி, வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

