உதகையில் நவம்பா் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நீலகிரி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் நவம்பா் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலா மேரி வெளிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நவம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீ கூட்டம் உதகை ஃபிங்கா் போஸ்டில் உள்ள கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் நவம்பா் 21-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நவம்பா் 7 -ஆம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநா், தபால்பெட்டி எண்.72, உதகை - 643001 என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்கலாம்.
இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியா், அனைத்து துறை அலுவலா்களும் கலந்து கொள்வதால் விவசாயிகள் விவசாயம் சம்பந்தமான குறைகளைக் கூட்டத்தில் தெரிவித்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
