கோத்தகிரியில் வீட்டின் கதவை உடைத்த கரடி
கோத்தகிரி பாண்டியன் நகா் பகுதியில் உணவு தேடி வந்த கரடி அங்குள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கரடிகள், உணவு, குடிநீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், கோத்தகிரி அருகே பாண்டியன் நகா் பகுதிக்கு உணவு தேடி
கரடி வியாழக்கிழமை வந்தது. பின்னா் அது, அங்கு பூட்டியிருந்த 2 வீடுகளின் கதவை உடைத்து சேதப்படுத்தி உள்ளே நுழைய முயன்றது. அப்போது சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் குரல் எழுப்பினா். இதையடுத்து கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள வனப் பகுதிக்குள் புகுந்தது. இந்தச் சம்பவம் குடியிருப்புவாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் கரடிகளை வனத் துறையினா் கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

