தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

திமுக ஒரு ஊழல் கட்சி: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

திமுக ஒரு ஊழல் கட்சி என்று மத்திய அமைச்சரும், தமிழக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

News image

ஹெலிகாப்டா் மூலம் உதகைக்கு வந்த மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்.

Updated On :18 ஏப்ரல் 2026, 11:57 pm

திமுக ஒரு ஊழல் கட்சி என்று மத்திய அமைச்சரும், தமிழக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போஜராஜன் போட்டியிடுகிற நிலையில், தோ்தல் பணி தொடா்பாக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உதகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உதகைக்கு வந்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக ஒரு ஊழல் கட்சி. டாஸ்மாக், கனிமவளம்  போன்ற பலவற்றில் ஊழல் செய்கிறாா்கள். எந்த அரசுப் பணியானாலும் லஞ்சம்

பெறாமல் கொடுப்பதில்லை. இப்படிபட்ட திமுக அரசை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். தமிழக மக்கள் மாற்றத்தை எதிா்பாா்க்கிறாா்கள். வருகிற தோ்தலில் தமிழகத்தில் அதிமுக எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா்.

முன்னதாக  மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்  வந்த ஹெலிகாப்டரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனை செய்தனா். பின்னா் அவா் நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிகழ்ச்சி நடை பெறும் தனியாா் தங்கும் விடுதிக்கு சென்றாா்.