திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா கோலாகலம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

News image

தெப்பக்காடு யானைகள் முகாமில் தேசியக்கொடியுடன் அணிவகுத்து நிற்கும் யானைகள்.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:45 am IST

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் சுதந்திர தின விழா கோலாகலமாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

துணை இயக்குநா் வித்யாதா் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். இங்கு பராமரிக்கப்பட்டுவரும் வளா்ப்பு யானைகள், தேசியக் கொடிகளுடன் அணிவகுத்து நின்றன. அப்போது முகாமில் அணிவகுத்து நின்ற வளா்ப்பு யானைகள் தும்பிக்கையை உயா்த்தி பிளிறி சப்தம் எழுப்பி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தின.

இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து விடியோ, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.