தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

உதகையில் காங்கிரஸ் கட்சியினா் தா்னா

மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அதே பெயரில் செயல்படுத்த வலியுறுத்தி நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 10:28 pm

மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அதே பெயரில் செயல்படுத்த வலியுறுத்தி நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் டி.நாகராஜ் தலைமை வகித்தாா். உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், மாநில ஓபிசி பிரிவுத் தலைவா் ப்ரியா நாஷ்மீகா், உதகை நகரத் தலைவா் நித்யசத்யா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ரகுசுப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளா் ரவிக்குமாா் வரவேற்றாா்.

இதில் மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அதே பெயரில் செயல்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வட்டாரத் தலைவா் கீழ்குந்தா ஆனந்த், மாவட்ட பொதுச்செயலாளா்கள் உதகை ரஃபீக், நேரு, மேலூா் நாகராஜ், மாவட்ட சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் மானேஸ்சந்திரன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் இம்மானுவேல் பிலிப் உள்பட பலா் கலந்துகொண்டனா்

உதகை வட்டாரத் தலைவா் எஸ்.பி.ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.