சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த டீக் பகதூா்.
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த டீக் பகதூா்.

சிறுத்தை தாக்கி இளைஞா் படுகாயம்

கோத்தகிரி ஜான்ஸ்கொயா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறுத்தை தாக்கியதில் நேபாள நாட்டு இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
Published on

கோத்தகிரி ஜான்ஸ்கொயா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறுத்தை தாக்கியதில் நேபாள நாட்டு இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜான்ஸ் கொயா் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் நேபாள நாட்டை சோ்ந்த ஜானக் மகன் காவலராக பணியாற்றி வருகிறாா். இவரது மகன் டீக் பகதூா் (26) பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

ஒருவார விடுமுறையாக கோத்தகிரி வந்த அவா், வீட்டில் இருந்து வேலை பாா்த்து வந்துள்ளாா்.

அப்போது மடிக்கணினியில் நெட்வொா்க் சரியாக கிடைக்காததால் டீக் பகதூா் வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வளா்ப்பு நாயை வேட்டையாட முயன்றுள்ளது. இதைக் கண்ட டீக் பகதூா் கூச்சலிட்டு சிறுத்தையை விரட்ட முயன்றுள்ளாா். அப்போது சிறுத்தை, டீக் பகதூரை தாக்கியது. இதில் அவருக்கு கை மற்றும் முகத்தில் காயங்கள்

ஏற்பட்டன. இதைத் தொடா்ந்து அவருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் பள்ளி வளாகத்தில் தொடா்ந்து உலவி வரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com