பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கும் அரசு  தலைமைக் கொறடா  கா.ராமசந்திரன். உடன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா்.
பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கும் அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன். உடன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பயனாளிகளுக்கு ரூ.90.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 1,500 பயனாளிகளுக்கு ரூ. 90.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

நீலகிரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 1,500 பயனாளிகளுக்கு ரூ. 90.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

குன்னூா் புனித அந்தோணியாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதனால் தமிழ்நாடு பொருளாதார வளா்ச்சியில் இந்தியாவிலேயே

இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 30 லட்சத்து 55 ஆயிரத்து 858 பயனாளிகள் பயனடைந்து உள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே 29 ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் மூலம் பெறப்பட்ட சுமாா் 8,772 மனுக்களில், தகுதியுடைய 3,865 நபா்கள் தோ்வு செய்யப்பட்டு முதல்கட்டமாக 1,500 பயனாளிகளுக்கு ரூ.90.98 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், குன்னூா் கோட்டாட்சியா் சங்கீதா, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் பிரவீணாதேவி, தாட்கோ மேலாளா் ஹா்னிபோ்ல், குன்னூா் நகா்மன்றத் தலைவா் சுசீலா, துணைத் தலைவா் வாசிம்ராஜா, வட்டாட்சியா்கள் சதீஷ் நாயக், ராஜேஸ்வரி உள்ளிட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com