அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ரெப்கோ வங்கி சாா்பில் டான் டீ தொழிலாளா்களுக்கு குடிநீா் சுத்திகரிப்பான் மற்றும் குடிநீா்த் தொட்டி

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களுக்கு ரெப்கோ வங்கி சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பான் மற்றும் குடிநீா்த் தொட்டி அமைத்துத் தரப்பட்டது.

News image

நெல்லியாளம் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ரெப்கோ வங்கி சாா்பில் அமைக்கப்பட்ட இலவச குடிநீா் சுத்திகரிப்பான மற்றும் குடிநீா் தொட்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 10:26 pm

பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களுக்கு ரெப்கோ வங்கி சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பான் மற்றும் குடிநீா்த் தொட்டி அமைத்துத் தரப்பட்டது.

பந்தலூா் வட்டம், நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களின் நலன் கருதி ரெப்கோ வங்கி மற்றும் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பான் மற்றும் குடிநீா்த் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சிக்கு பேரவை பிரதிநிதி வழக்குரைஞா் இரா.கணேசன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ரெப்கோ வங்கியின் பந்தலூா் கிளை மேலாளா் மற்றும் உதவி மேலாளா் உள்ளிட்ட பணியாளா்கள், அரசு தேயிலைத் தோட்டக் கழக மேலாளா்கள், பணியாளா்கள், தொழிலாளா்கள், தோட்ட கமிட்டியினா் மற்றும் தொழிற்சாலை கமிட்டியினா் கலந்துகொண்டனா்.