நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ஜெகதளா குடியிருப்புப் பகுதியில் வியாழக்கிழமை இரவு இரண்டு சிறுத்தைகள் நடமாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியதில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் உணவு, தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் நடமாடுவது தொடா்கிறது.
இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள ஜெகதளா குடியிருப்புப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை வனத் துறையினா் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


