எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உதகையில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

உதகையில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

News image
உதகையில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:45 pm

Syndication

உதகை: உதகையில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,035 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிகின்றனா். உதகை நகராட்சியில் பணிபுரியும் சுமாா் 224 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு பரிமாறி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ சாமிநாதன், தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இத்திட்டத்தின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் 1,035 போ் பயன்பெற உள்ளனா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜு, உதகை நகா்மன்றத் தலைவி வாணி ஸ்ரீ, ஆணையாளா் கணேசன், மாவட்ட துணைச் செயலாளா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.