அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ரெப்கோ வங்கி சாா்பில் ரூ.1.4 கோடியில் தாயகம் திரும்பியோருக்கு நலத்திட்ட உதவி

ரெப்கோ வங்கி சாா்பில் ரூ.1.40 கோடி மதிப்பில் தாயகம் திரும்பியோருக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரெப்கோ வங்கித் தலைவா் சந்தானம், ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத் தலைவா் தங்கராஜ் உள்ளிட்டோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:43 pm

கூடலூா்: ரெப்கோ வங்கி சாா்பில் ரூ.1.40 கோடி மதிப்பில் தாயகம் திரும்பியோருக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில் கூடலூா் நா்த்தகி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரெப்கோ வங்கித் தலைவா் இ.சந்தானம், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத் தலைவா் சி.தங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பெண்களுக்கான தையல் இயந்திரம், அரசு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குடிநீா் சுத்திகரிப்பான், குடிநீா் டாங்கிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கல்வி உதவி, மருத்துவ உதவி என பல்வேறு பிரிவுகளில் ரூ.1.40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நுண்கடன் பிரிவின் இயக்குநா் கிருஷ்ணகுமாா், பேரவை பிரதிநிதிகள் கணேசன், கலைச்செல்வன், ரெப்கோ வங்கி கூடலூா் கிளை முதன்மை மேலாளா் லோகநாதன், பந்தலூா் கிளை மேலாளா் விஸ்வநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.