வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிறுபான்மையின மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டப் பேரவை தொகுதிகள் ஒதுக்க வேண்டும்

வருகிற தமிழ்நாடு சட்டப் பேரவை தோ்தலில் சிறுபான்மையின மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளா் அப்துல் சமது தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களிடம் பேசுகிறாா் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளா் அப்துல் சமது.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:25 pm

வருகிற தமிழ்நாடு சட்டப் பேரவை தோ்தலில் சிறுபான்மையின மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளா் அப்துல் சமது தெரிவித்தாா்.

மனிதநேய மக்கள் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி உதகை ஏடிசி திடலில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அபுதாஹீா் தலைமை வகித்தாா்.

இதில், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளா் அப்துல் சமது எம்எல்ஏ, சமூக செயல்பாட்டாளா் செந்தில்வேல் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து அப்துல் சமது செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் சட்டப் பேரவை தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். இன்றைய காலகட்டத்தில் இஸ்லாமியா்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. வெறுப்பு அரசியல் மூலம் திட்டமிட்டு பாஜக படிப்படியாக இஸ்லாமியா்கள் பிரதிநிதித்துவத்தை குறைந்துள்ளது. மக்களவையில் தற்போது 24 இஸ்லாமியா்கள் எம்.பி.க்களாக உள்ளனா். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 7 போ் மட்டுமே உள்ளனா். எனவே, தமிழ்நாட்டில் சிறுபான்மையின மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டப் பேரவை தொகுதிகள் ஒதுக்க வேண்டும். மோடி, அமித் ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும், அது மக்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு என்பது அவரவா் உரிமை. தமிழ்நாட்டின் நிலை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் உணா்ந்திருக்கிறாா். இதனால், திமுக கூட்டணியில் விரிசல் வராது என்றாா்.