2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ரோஜா கண்காட்சிக்காக கவாத்து செய்யும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள ரோஜா கண்காட்சிக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
ரோஜா பூங்காவில் கவாத்து பணியை தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள ரோஜா கண்காட்சிக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை கவா்வதற்காக மே மாதம் முழுவதும் மலா்க்கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள ரோஜா கண்காட்சிக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, ரோஜா தோட்ட கவாத்துப் பணிகளை தொடங்கிவைத்தாா். பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 4,301 ரகங்களில் 32,800 ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை பூங்கா ஊழியா்களைக் கொண்டு கவாத்து செய்யும் பணி தொடங்கியது. தற்போது இப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் மே மாதம் முதல் வாரத்தில் கவாத்து மேற்கொண்ட ரோஜா செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா, ரோஜா பூங்கா இணை இயக்குநா் பைசல் உள்பட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.