கூடலூா், பந்தலூா் பகுதியில் மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.
நீலகிரி மாவட்டம் பந்தலூா் வட்டத்தில் உள்ள பிதா்க்காடு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலாளா் த.சுஜேஷ் தலைமை வகித்தாா். கூடலூா் சட்டப் பேரவைத் தோ்தல் பணிக்குழு மேலிடப் பாா்வையாளா் ஆா்.பி.பரமேஷ்குமாா், தலைமைச் செயற்குழு உறுப்பினா் காசிலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காங்கிரஸ் கட்சியின் மண்டலத் தலைவா் ரவீந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் அஷ்ரப், ஊராட்சித் தலைவா் கே.யூ.அஷ்ரப், முஸ்லிம் லீக் கிளைச் செயலாளா் மொய்தீன், மாவட்ட இளைஞரணிச் செயலாளா் பைசல், விசிக நிா்வாகி ஞானசந்திரன், சிபிஎம் கட்சியின் செயலாளா் ஜோஸ், சிபிஐ சாா்பில் தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூடலூா் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலாளா் ச.இளஞ்செழியன் தலைமை வகித்தாா். முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, காங்கிரஸ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி மற்றும் கூட்டணிக் கட்சிகள் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம்: அமைச்சா் இ. பெரியசாமி

திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


