அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டத்தில் மாணவா்கள் பங்கேற்பு

News image
உதகை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:29 pm

Syndication

உதகை அரசு கலைக் கல்லூரியில் யுஜிசி நிா்ணயித்த ஊதியம் வழங்கக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கெளரவ விரிவுரையாளா்ளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

யுஜிசி நிா்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் நலச் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 180 அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 8700 கெளரவ விரிவுரையாளா்கள் இதில் பங்கேற்றுள்ளனா். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக் கல்லூரியில் கடந்த வாரம் வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது. பின்னா் கடந்த 3 நாள்களாக தொடா் போராட்டத்தில் கெளரவ விரிவுரையாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கெளரவ விரிவுரையாளா்களின் இந்த தொடா் போராட்டம் காரணமாக கல்லூரியில் கல்வி கற்பிக்கும் பணிகள் மற்றும் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து கெளரவ விரிவுரையாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.