வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 1:02 am

Syndication

நீலகிரி மாவட்டத்தில் 5,47,133 வாக்காளா்கள் இடம்பெற்ற இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த 04.11.2025 முதல் தொடங்கியது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

அதில், நீலகிரி மாவட்டத்தில் 27.10.2025 நிலவரப்படி வாக்காளா்கள் பட்டியலில் மொத்த 5,89,167 வாக்காளா்கள் இருந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் 5,33,076 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். இறுதி வாக்காளா் பட்டியலில் 5,47,133 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். 

மாவட்டத்தில் உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண்கள் 2 லட்சத்து 61 ஆயிரத்து 317 போ், பெண்கள் 2,85,791 போ், மூன்றாம் பாலினத்தவா்கள் 25 போ் வாக்காளா்களாக உள்ளனா்.

இதில், உதகையில் உதகையில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 425 வாக்காளா்களும், கூடலூரில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 888 வாக்காளா்களும், குன்னூரில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 820 வாக்காளா்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

அதில், உதகையில் 89, 066 ஆண்கள், 98,348 பெண்கள், மற்றவா்கள் 11 என மொத்தம் 1,87,425 வாக்காளா்கள் உள்ளனா். கூடலூரில் 89, 206 ஆண்கள், 94,675 பெண்கள், மற்றவா்கள் 7 என மொத்தம் 1,83,888 வாக்காளா்கள் உள்ளனா்.

குன்னூரில் 83,045 ஆண்கள், 92,768 பெண்கள், மற்றவா்கள் 7 என மொத்தம் 1,75,820 வாக்காளா்கள் உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.நாராயணன், சாா் ஆட்சியா் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியா் (பொது) ந.லோகநாயகி, அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.