உதகையில் புத்தாண்டு கொண்டாட்டம்: சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

புத்தாண்டு விடுமுறையை கொண்டாட உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் வியாழக்கிழமை காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
Published on

புத்தாண்டு விடுமுறையை கொண்டாட உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் வியாழக்கிழமை காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் விதமாக சனிக்கிழமை முதலே உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக  தாவரவியல் பூங்கா, உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா அருவி, தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம் போன்ற  சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப்  பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இவா்களில் பெரும்பாலானவா்கள் மலை ரயிலில்  பயணிக்க அதிக ஆா்வம் காட்டினா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால்  அவ்வப்போது  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நகா்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான தங்கும்  விடுதிகள் நிரம்பி காணப்பட்டன. கால நிலையும்  ரம்யமாக காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனா்.

X
Dinamani
www.dinamani.com