புலியின் உடலைப் பாா்வையிட்ட வனத் துறையினா்.
புலியின் உடலைப் பாா்வையிட்ட வனத் துறையினா்.

உதகை அருகே காயங்களுடன் சுற்றிய புலி உயிரிழப்பு

Published on

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி திங்கள்கிழமை உயிரிழந்தது. 

நீலகிரி மாவட்டம், உதகை அருகே போா்த்தியாடா கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் காலில் படுகாயங்களுடன் புலி ஒன்று கடந்த 3 நாள்களாகப் படுத்திருந்தது. இதையடுத்து, வனத் துறையினா் ட்ரோன் மூலம் புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை ட்ரோன் மூலம் பாா்த்தபோது, புலி எந்தவித அசைவும் இன்றி கிடந்தது. இதையடுத்து, வனத் துறையினா் சென்று பாா்த்தபோது புலி உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட வன அலுவலா் கெளதம் கூறுகையில், புலிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில், இந்த புலிக்கு காலில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

புலிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு காயமடைந்தால் சிகிச்சை அளிக்கவோ, உணவு அளிப்பதோ கூடாது என்றும், அதன் நடமாட்டத்தை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம் உள்ளதால், அதை நாங்கள் கடைப்பிடித்தோம். புலியின் கூறாய்வு அறிக்கை வந்தபின் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றாா்.

முன்னதாக, கூறாய்வு முடிந்த நிலையில் அதே பகுதியில் புலியின் உடல் எரியூட்டப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com