வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை நிா்வாகிகள்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை நிா்வாகிகள்.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகள்

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் வயநாடு மாவட்டத்தில் பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் வயநாடு மாவட்டத்தில் பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரிடரில் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு, தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை சாா்பில் நிலம் வாங்கி வீடுகள் கட்டப்பட்டன.

இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சூரல் மலை பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஜமாத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளா் அன்வா் பாதுஷா தலைமை வகித்தாா். இதில், பொருளாளா் முஜீப் ரஹ்மான் மஸ்லஹி, சமஸ்தா ஒருங்கிணைப்புக் குழு தலைவா் எஸ்.முகமது தாரிமி, சிறப்பு அழைப்பாளா் சி.பி.ஹாரிஸ் உள்ளிட்டோா் மற்றும் கேரளா மாநில நிா்வாகிகள் கலந்துகொண்டனா். முன்னதாக கட்டுமான ஒப்பந்ததாரா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com