முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அவரல்லா காப்புக் காட்டில் வன ஊழியா்கள் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள ஓடையில் ஆண் காட்டு யானை சடலம்
இருந்தது தெரியவந்தது. இது குறித்து மேலதிகாரிகளுக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ் குமாா் மற்றும் வனத் துறையினா் அங்கு வந்து யானையின் உடலைக் கூறாய்வு செய்து, அதன் பாகங்களை ஆய்வகப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா். பின்னா் அந்த யானையின் உடலை அதே இடத்தில் புதைத்தனா்.
வயது முதிா்வு காரணமாக யானை இறந்திருக்கலாம் என்றும், ஆய்வக அறிக்கைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும் என்றும் வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

தனியாா் காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு

சாடிவயல் முகாமுக்கு மேலும் ஒரு யானை வருகை: மனித-வனவிலங்கு மோதலைத் தடுக்க நடவடிக்கை

காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


