பாரத ஸ்டேட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கிகோப்புப் படம்

வங்கி ஊழியா்கள் அடையாள வேலை நிறுத்தம்!

வாரத்துக்கு 5 நாள் வேலை முறையை அமல்படுத்த வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
Published on

வாரத்துக்கு 5 நாள் வேலை முறையை அமல்படுத்த வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் செவ்வாயக்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கிகளில் 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வங்கி ஊழியா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இது தொடா்பாக வங்கி ஊழியா்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால் உதகையில் 70 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூடப்பட்டிருந்தன.

இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோரிக்கையை வலியுறுத்தி உதகையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்க பொதுச் செயலாளா் ராஜ்குமாா் தலைமை தாங்கினாா். ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க செயலாளா் சேகா், கனரா வங்கி அதிகாரிகள் சங்க செயலாளா் காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

X
Dinamani
www.dinamani.com