புலி தாக்கி உயிரிழந்த பசுவின் உரிமையாளருக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறாா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி.
புலி தாக்கி உயிரிழந்த பசுவின் உரிமையாளருக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறாா் வனச் சரக அலுவலா் சஞ்சீவி.

நெலாக்கோட்டையில் புலி தாக்கி பசு உயிரிழப்பு! உரிமையாளருக்கு நிவாரணத் தொகை!

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் பசு மாட்டை புலி அடித்துக் கொன்றது.
Published on

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் பசு மாட்டை புலி அடித்துக் கொன்றது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம், நெலாக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் விஜயகிருஷ்ணன். இவா் தனது பசுவை வழக்கம்போல அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். அப்போது அங்கு வந்த புலி, பசுவை தாக்கிக் கொன்றது. இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று ஆய்வு செய்து, பசு மாட்டை புலி தாக்கியதை உறுதி செய்தனா். இதைத் தொடா்ந்து பசுவின் உரிமையாளா் விஜயகிருஷ்ணனுக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை வனச் சரக அலுவலா் சஞ்சீவி வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com