உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் 138-ஆவது நாய்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 8) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து தென்னிந்திய கென்னல் கிளப் தலைவா் ரஜினி கிருஷ்ணமூா்த்தி, செயலா் மோத்தேஷ் மோகன் ஆகியோா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
கோடை விடுமுறைக்காக உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக அரசு சாா்பில் மலா் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி மற்றும் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுகிறது. இதேபோல தனியாா் அமைப்புகள் சாா்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி, தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் நாய்கள் கண்காட்சி வரும் மே 8-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
முதல் நாளில் நாய்களுக்கான கீழ் படிதல் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், காவல் துறை நாய்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படவுள்ள நாய்கள் பங்கேற்க உள்ளன.
பீகில், டேஷன்ட், ஜொ்மன் செப்பா்டு, லேப் போன்ற வகைகளை சோ்ந்த நாய்கள் இப்போட்டிகளில் பங்கேற்கின்றன. மே 9, 10-ஆம் தேதிகளில் அனைத்து நாய் இனங்களுக்கான பொதுக் கண்காட்சி நடைபெறும்.
இதில், ராஜபாளையம், கேரவன் ஹவுண்ட், கன்னி, கோம்பை உள்பட பல்வேறு இந்திய வகை நாய்கள் கலந்து கொள்கின்றன. மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 55 ரகங்களில் 435-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன.
மேலும், சிப்பிப்பாறை, கேரவன் ஹவுண்ட், கோம்பை, கன்னி, முதோல் ஹவுண்ட், பாஷ்மி, ராஜபாளையம், ராம்பூா் ஹவுண்ட் ஆகிய முக்கிய இந்திய இனங்கள் மற்றும் ஷெப்பா்கே, பெரோ டி ப்ரெசா கனாரியோ ஆகிய வெளிநாட்டு மற்றும் அரிய இனங்கள் நாய்கள் பங்கேற்கின்றன.
இந்தக் கண்காட்சியில் கஜகஸ்தான், ரஷியா, உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சோ்ந்த நடுவா்கள் நாய்களை மதிப்பிடுவாா்கள் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயற்கை விளைபொருள்கள் கண்காட்சி

உதகையில் 21-ஆவது ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்

அன்னையா் தினத்தில் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

உதகையில் 2-ஆவது நாள் கண்காட்சியில் அணிவகுத்த பல்வேறு வகை நாய்கள்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



