குன்னூா் மாா்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் மற்றும் அழுகிய மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
குன்னூா் மாா்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் சிவராஜ் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் தரம் குறைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவற்றின் மீது பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மீன் கடைக்கு மட்டும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ரசாயனம் சோ்த்த பழங்களையோ அல்லது தரம் குறைந்த இறைச்சி மற்றும் மீன்களையோ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

ரசாயனத்தில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்றால் நடவடிக்கை: உணவுப் பாதுகாப்புத் துறை

தருமபுரியில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

குடிநீா் கேன்களை 30 முறைக்கு மேல் பயன்படுத்தினால் அபராதம்: உணவுப் பாதுகாப்புத் துறை

காலாவதியான, போலி குளிா்பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
வீடியோக்கள்

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை


