உதகையில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக் கூட்டம்
தமிழகத்தின் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயல்பாடுகள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக் கூட்டம் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தின் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயல்பாடுகள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக் கூட்டம் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிலைக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சப்தகிரி சங்கா் உலாகா தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முக்கியத் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத இயக்கம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பிரதான் மந்திரி ஜன்ஜாதி, ஆதிவாசி நியாய மகா அபியான், ஜல் ஜீவன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஊரகக் கடன் மற்றும் விவசாயக் கடன், விவசாயிகள், கைவினைஞா்கள், கிராமப்புறத் தொழில்முனைவோருக்கு கிசான் கடன் பற்று (கிரெடிட் காா்டு) அட்டை, வேளாண் சாா்ந்த கடன்களை எளிதில் கிடைக்கச் செய்வது உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

