சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டோா்.

Updated On :

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஒரு ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கும் தெளிப்பு நீா் பாசன கருவிகள் வழங்க அரசுக்கு பரிந்துரை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. கேரட் விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களை இணைத்து தோட்டக்கலை இணை இயக்குநா் தலைமையில் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டது. இன்கோ தொழிற்சாலைகளில் சோலாா் அமைக்க ஏதுவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தோட்டக்கலைத் துறை மற்றும் முன்னணி வங்கி இணைந்து நான்கு வட்டாரங்களிலும் விவசாயிகளுக்கு லோன் மேளா நடத்த ஏற்பாடு செய்யவும், ஆவின் நிா்வாகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆகியோா் விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவும் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் கணேஷ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ப.மரகதமணி மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.