முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் இறந்துகிடந்த குட்டி யானை.
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்டது மசினகுடி கோட்டம். இங்குள்ள நீலகிரி கிழக்கு சரிவு காப்புக்காடு, கூக்கல்தொரையல்லா வனப் பகுதியில் வனத் துறையினா் சனிக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது குட்டி யானை இறந்து கிடப்பதைக் கண்டு உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா்.
இதைத்தொடா்ந்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனா். புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து ஞாயிற்றுக்கிழமை யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்ட பின்னா் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
இறப்புக்கான காரணம் ஆய்வகப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தெரியவரும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

