பல்லடம் சின்னக்கரை தர்காவில் சந்தன உரூஸ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சின்னக்கரை ஹஜ்ரத் காதர் மஸ்தான் வலியுல்லாஹ் தர்கா வக்புயில் சந்தன உரூஸ் மற்றும் கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் அ.தமிழ்மகன்உசேன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம், கரைப்புதூர் ஊராட்சித் தலைவர் ஏ.நடராஜன், பல்லடம் நகராட்சி துணைத் தலைவர் பி.கே.பழனிசாமி, வக்ஃபு வாரிய உறுப்பினர் எஸ்.ஏ.பாரூக், கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.சித்துராஜ், திருப்பூர் கே.எஸ்.அப்பாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.