ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசு

கோயில் கட்டுமானப் பணி: கற்கள் விழுந்து 4 தொழிலாளர்கள் படுகாயம்

திருப்பூர் அருகே பெரிய பூலுவபட்டியில் கோயில் கட்டுமானப் பணியின்போது, கற்கள் சரிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை படுகாயமடைந்தனர்.

Published On :

திருப்பூர் அருகே பெரிய பூலுவபட்டியில் கோயில் கட்டுமானப் பணியின்போது, கற்கள் சரிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மாநகராட்சி, 19-ஆவது வார்டு பெரிய பூலுவபட்டி அம்மன் நகர் பகுதியில், கரியகாளியம்மன் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கோயில் உள்பிரகார மண்டபம் மேற்கூரை அமைக்கும் பணிக்காக, கருங்கற்கள் அடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மேற்கூரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்கள் திடீரென சரிந்து விழுந்தது.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் முத்தனாபுரம் பாண்டித்துரை (21), தட்டக்குறிச்சி கருப்பையா (21), வி.ஆர்.பொன்னகாட்டுப்பட்டி சத்தியமூர்த்தி (34), லட்சுமிபுரம் சதீஷ் (24)  ஆகியோர் கற்களுக்கிடையே சிக்கி படுகாயமடைந்தனர்.

அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் தொழிலாளர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.