ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மழையால் தேங்காய் கொப்பரை விலை உயர்வு

மழை காரணமாக, வெள்ளக்கோவிலில் தேங்காய் கொப்பரை விலை உயர்ந்தது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:15 am

DIN

மழை காரணமாக, வெள்ளக்கோவிலில் தேங்காய் கொப்பரை விலை உயர்ந்தது.
வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் பருப்பு ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், மூலனூர், வெள்ளக்கோவில் பகுதிகளில் இருந்து 35 உழவர்கள் தேங்காய் கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
காங்கயம், முத்தூரில் இருந்து 9 வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மொத்த வரத்து 194 மூட்டைகள். 9,770 கிலோ.  மழை காரணமாக காயவைக்க முடியாததால் இந்த வாரம் வரத்து குறைந்து விட்டது. இதனால் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.1.50 வரை விலை கூடியது.  அதிகபட்சமாக கிலோ ரூ.119.85, குறைந்தபட்சம் ரூ.65.65 என ஏலம் போனது. சராசரி விலை ரூ.80.55. ஒட்டுமொத்தத் தொகை ரூ.8.47 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாகக் கொடுக்கப்பட்டது.
விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் மேற்பார்வையில் ஏலம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.