கிராமப்புறக் கல்லூரிகளில் உடுமலை அரசு கலைக் கல்லூரி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (ஙஏதஈ) 2018-ஆம் ஆண்டுக்கான தேசியத் தரவரிசை மதிப்பீட்டுப் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
இதில், உடுமலை அரசு கலைக் கல்லூரி அகில இந்திய அளவில் கிராமப்புறக் கல்லூரிகளில் முதலிடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதலிடத்தையும், திருப்பூர் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி தேசிய அளவிலான கலை, அறிவியல் கல்லூரிகளில் இக்கல்லூரி 71-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
கற்றல் கற்பித்தலில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் மாணவர் விகிதம், பேராசிரியர்களின் பணி அனுபவம், அவர்களது ஆய்வுப் பணிகள், ஆய்வுக் கட்டுரை வெளியீடு, நூலாக்கம், மாணவர் தேர்ச்சி விகிதம், மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பி ன்புலம், மாற்றுத் திறனாளி மாணவர்கள் சேர்க்கை, போட்டிச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களில் தமிழகத்தில் இருந்து 36 கல்லூரிகள் இடம் பிடித்து ள்ளன. இதில் ஐந்து அரசு கல்லூரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், உடுமலை அரசு கலைக் கல்லூரி 4-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பிடம் பெற்றதற்காக கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா, கோவை மண்ட லக் கல்லூரிக் கல்வி இயக்குநர் ச.கலா, கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் முதல்வர் (பொறு) ச.பொன்முடி மற்றும் பேரா சிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரை பாராட்டினர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் கலந்துகொள்ள கல்லூரி நிர்வாகத்தினருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாதி குறித்து அவதூறு பேச்சு! பஞ்சாப் எஸ்சி ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய மத்திய இணையமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


