/
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்தக் கையெழுத்து இயக்கத்தை கட்சியின் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைவர் டி.ரத்தினவேல் தொடக்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, உடுமலை நகரில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இதில், மாவட்ட துணைத் தலைவர் யுகேபிஎம்.கார்த்திகேயன், இளைஞரணி மாநில துணைத் தலைவர் அபிராமி, நகரச் செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








