வாழ்க்கையில் வெற்றி பெறத் தன்னம்பிக்கையிடன் கூடிய விடாமுயற்சி அவசியம் என கோவை மாநகரக் காவல் உதவி ஆணையர் கோ.அனிதா பேசினார்.
தாராபுரம் மகாராணி கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ஒளியேற்றும் விழா மற்றும் முதுகலை, இளங்கலைப் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்குப் பிரிவுபசார விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவர் ஜி.எம்.அகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். செயலர் என்.ஏ.எச்.சுலைமான் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கோவை மாநகரக் காவல் துறை உதவி ஆணையர் கோ.அனிதா பங்கேற்று, பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: வளர்ந்து வரும் நாகரீக, விஞ்ஞான உலகுக்கேற்ப மாணவ, மாணவிகள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நாகரீகம் எனும் பெயரில் தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெறத் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அவசியமாகும்.
மேற்கொள்ளும் பணியில் எடுத்துக்காட்டாய், முன் உதாரணமாகப் பணியாற்ற வேண்டும். பணிபுரியும் இடத்தில் கல்வி கற்றுக்கொடுக்க வாய்ப்பளித்த நிறுவனத்துக்கும், கற்றுக்கொடுத்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
விழாவில் கல்லூரி துணைத் தலைவர் வி.கோவிந்தராஜ், இயக்குநர் எம்.ஆர்.தமிழரசன், அறக்கட்டளை உறுப்பினர் என்.ஏ.எச்.அப்துல் ரகுமான், முதல்வர் எஸ்.தமிழ்ச்செல்வி மற்றும் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விளையாட்டு ஆணையத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் பணி: 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


