கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வீட்டுமனை விற்பனையாளரைக் கண்டித்து குடியிருப்புவாசிகள் போராட்டம்

அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட தனியார் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதி செய்து தராத வீட்டுமனைப்

Updated On :9 ஏப்ரல் 2018, 12:50 am

அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட தனியார் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதி செய்து தராத வீட்டுமனைப் பிரிவு விற்பனையாளர்களைக் கண்டித்து அப்பகுதி மக்கள் கருப்புக் கொடி கட்டி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட தனியார் குடியிருப்புப் பகுதியில், 90 குடும்பத்தினருக்கு மேல் பல லட்சம் முதலீடு செய்து வீடு அமைத்து குடியிருந்து வருகின்றனர். 
இந்நிலையில் இப்பகுதியில் குடிநீர்,  சாக்கடை,  சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை  ஒப்பந்தப்படி வீட்டுமனைப் பிரிவு விற்பனையாளர்கள் செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக அங்கு வசிப்பவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த தனியார் வீட்டுமனைப் பிரிவு விற்பனையாளர்கள்,  குடியிருப்புப் பகுதி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதையடுத்து அங்கு வசிப்பவர்கள் அந்த இயந்திர வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து,  வீட்டுமனைப் பிரிவு நிர்வாகிகள் அங்கிருந்து தப்பியோடினர்.  பிறகு சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார்,  காவல் நிலையத்தில் உரிய மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து தனியார் குடியிருப்பு மக்கள் அவிநாசி காவல் நிலையத்தில் இதுகுறித்து மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.