ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பல்லடத்தில் 26ஆம் தேதி முதல் மார்கழி உற்சவப் பெருவிழா

பல்லடம் சத்யசாயி சேவா சமிதி சார்பில் பொங்காளியம்மன் கோயில் வளாகத்தில் மார்கழி உற்சவப் பெருவிழா

Updated On :25 டிசம்பர் 2018, 8:25 am IST

பல்லடம் சத்யசாயி சேவா சமிதி சார்பில் பொங்காளியம்மன் கோயில் வளாகத்தில் மார்கழி உற்சவப் பெருவிழா வரும் 26ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஜனவரி  4ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
இதில், தினமும் 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்மிகச் சொற்பொழிவு  நடைபெறவுள்ளது. இவ்விழாவை சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் துவக்கிவைக்கிறார். 26ஆம் தேதி விஞ்ஞானத்தில் ஆன்மிகம் என்ற தலைப்பில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரஸ்வாமிகளும்,  27ஆம் தேதி திருப்பூர் வழக்குரைஞர் வி.வெங்கடேஷ், 28ஆம் தேதி உயிருக்கு ஊதியமே என்ற தலைப்பில் வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன் ஆகியோர்  சொற்பொழிவாற்றுகின்றனர். 
29ஆம் தேதி மகிழன் பரிதி குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறவுள்ளது. 30ஆம் தேதி அடியார் பெருமைகள் என்ற தலைப்பில் வரன்பாளையம் திருநாவுக்கரசர் மடாலய மௌன சிவாசல அடிகள், 31ஆம் தேதி மந்திரமாவது நீர் என்ற தலைப்பில் புலவர் சு.ஆறுமுகம், ஜனவரி 1 ம் தேதி அம்மன் பெருமை என்ற தலைப்பில் செஞ்சேரிமலை திருநாவுக்கரசர் சுவாமிகள் மடத்தின் முத்துசிவராமசாமி அடிகள், 2ஆம் தேதி நாமஸ்மரனை  ஒரு சாதனை என்ற தலைப்பில் சாய்ஹேமாமோகன்குமார், 3ஆம் தேதி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தலைப்பில் இயற்கை நல வாழ்வியல் ஆலோசகர் கோவை பாலா, 4 ஆம் தேதி சைவம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில்  கணபதிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தரபாண்டியன் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றுகின்றனர். 
 இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை பல்லடம் சத்ய சாயி சேவா சமிதியினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.