தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துணிக் கிடங்கில் தீ விபத்து

திருப்பூரில் பின்னலாடைத் துணிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் கூறியது:

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:09 am

DIN

திருப்பூரில் பின்னலாடைத் துணிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், நொய்யல் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர், பெரிய கடை வீதியில் சிறிய அளவில் இரண்டாம் தர பின்னலாடைத் துணி மற்றும் நூல் விற்பனை செய்யும் கிடங்கு வைத்துள்ளார். புதன்கிழமை  பகலில் அவரது துணிக் கிடங்கில் தீப்பிடித்துள்ளது. அருகிலிருந்தவர்கள் பார்த்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீ அருகிலுள்ள கடைகளுக்கு பரவும் முன்னர் அணைத்தனர்.  இந்தத் தீவிபத்தில் பல்லாயிரம் மதிப்புடைய துணியும் நூலும் எரிந்து சேதமடைந்தது. திருப்பூர் தெற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.