காங்கயம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புங்கமடுவு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவரது மனைவி மகேஷ்வரி (32). கோவிந்தராஜ் வாழப்பாடியில் புகைப்பட நிலையம் (போட்டோ ஸ்டுடியோ) வைத்துள்ளார். இவரது அண்ணன் சண்முகராஜ் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள மின் வாரிய துணை மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கோவிந்தராஜ் தனது அண்ணனைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சனிக்கிழமை வந்துள்ளார். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை இந்தத் தம்பதி ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் சென்னிமலை அருகே சாவடி பகுதியில் கோவிந்தராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சென்னிமலையில் இருந்து காங்கயம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் பக்கவாட்டில் மோதியது. இதில் இருசக்கர வாகனம் தூக்கிவீசப்பட்டதில் கோவிந்தராஜ், மகேஷ்வரி ஆகிய இருவரும் பின்னால் வந்து கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

