பல்லடம் அருகே அலகுமலையில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை கிராமத்தில் முத்துக்குமாரசாமி திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் 168 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசுகையில், இன்று மக்களைத் தேடி அரசு அதிகாரிகளே கிராமங்கள்தோறும் சென்று இதுபோன்ற முகாம்களை நடத்தி மக்களின் தேவை அறிந்து உதவி செய்து வருகின்றனர்' என்றார்.
பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.சண்முகம், பொங்கலூர் ஒன்றிய முன்னாள் தலைவர் எஸ்.சிவாசலம், திருப்பூர் சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் லியாகத், வேளாண்மை இணை இயக்குநர் முகமது இக்பால், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

