மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நூலக வார விழா போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

உடுமலையில் நடைபெற உள்ள நூலக வார விழா போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:18 pm

DIN


உடுமலையில் நடைபெற உள்ள நூலக வார விழா போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை, தளி சாலையில் உள்ள முதல் கிளை நூலகத்தில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திறனறிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு மகாகவி பாரதி என்கிற தலைப்பிலும், 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு நூலகம் ஓர் அறிவுத் திருக்கோவில் என்ற தலைப்பிலும், 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன.
நவம்பர் 18, ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் கிளை நூலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இதில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு நவம்பர் 20ஆம் தேதி கிளை நூலகத்தில் நடைபெறும் விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.