திருப்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட சீர்மரபினர் மாணவர் விடுதியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். இதையடுத்து திருப்பூர் வடக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமார் குத்துவிளக்கேற்றி இனிப்பு வழங்கினார்.
திருப்பூர் மாநகராட்சியின் 33 வது வார்டு, ஊத்துகுளி சாலை, குளத்துபாளையம் பிரிவில் ரூ. 81லட்சம் மதிப்பில் சீர்மரபினர் மாணவர்களுக்கான விடுதி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சட்டப் பேரவை உறுப்பினர் நிதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர், ஆழ்துளைக் கிணறு ஆகியவை அமைக்கப்பட்டன.
இக்கட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.என்.விஜயகுமார் குத்துவிளக்கேற்றி, இனிப்பு வழங்கி, விடுதியைப் பார்வையிட்டார். முன்னாள் மண்டலத் தலைவர் ஜான், பொறுப்பாளர் பட்டுலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சாகுல் ஹமீது, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.