நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.
பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 147 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.
இதில், 70 மாடுகள் மொத்தம் ரூ.30 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. அதிகபட்சமாக ரூ. 68ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலைப் பசு விற்பனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.