வெள்ளக்கோவிலில் 22 டன் முருங்கைக்காய் வரத்து
By DIN | Published On : 01st April 2019 08:58 AM | Last Updated : 01st April 2019 08:58 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 22 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது.
இங்கு வாரந்தோறும் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன.
இந்த வாரம் 150 விவசாயிகள் ஏறத்தாழ 22 டன் அளவுக்கு முருங்கைக்காய்களைக் கொண்டு வந்திருந்தனர். மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் என இரு வகையும் கிலோ 4 ரூபாய்க்கு வியாபாரிகளால் வாங்கப்பட்டன. இது கடந்த வாரத்தை விட கிலோவுக்கு மூன்று ரூபாய் விலை குறைவாகும்.
கடந்த வாரம் 31 டன் வரத்து இருந்தது. இந்த வாரம் வரத்து குறைந்திருந்த நிலையிலும்கூட விலையும் அதிகரிக்கவில்லை. தரத்தில் சிறந்ததாக உள்ள செடி முருங்கைக்காய்களுக்கு அதிக விலை கிடைக்க வேண்டும்.
ஆனால், மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் ஆகிய இரண்டு வகையும் ஒரே விலைக்கு வாங்கப்படுவதால் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.