மின் நுகர்வோர் கவனத்துக்கு...
By DIN | Published On : 12th April 2019 08:31 AM | Last Updated : 12th April 2019 08:31 AM | அ+அ அ- |

வடுகபாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்டசித்தம்பலம், வெங்கிட்டாபுரம் பகிர்மானத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துவது குறித்து பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்லடம் கோட்டம், வடுகபாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட மின் இணைப்புகள் ஏப்ரல் மாதத்தில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தால் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே மேற்படி பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட சித்தம்பலம், வெங்கிட்டாபுரம் பகிர்மானத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் சென்ற பிப்ரவரி மாத மின் கட்டணத்தையே இம்மாதம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஜீன் மாத மின் கணக்கீடு செய்யும் போது அவை சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.