ரூ.18.85 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
By DIN | Published On : 12th April 2019 08:30 AM | Last Updated : 12th April 2019 08:30 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 18.85 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
இந்த வார ஏலத்துக்கு அரவக்குறிச்சி, கரூர், குளித்தலை, திருச்சி, சின்னதாராபுரம், பழனி பகுதிகளைச் சேர்ந்த 58 விவசாயிகள் தங்களுடைய சூரியகாந்தி விதைகளைக் கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 50 ஆயிரத்து 828 கிலோ வரத்து இருந்தது. காங்கயம், முத்தூர், ஈரோடு, கோபி, கஸ்பாபேட்டை, பூனாச்சி, காரமடையைச் சேர்ந்த 8 வணிகர்கள் இவற்றை வாங்க வந்திருந்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் நடந்த ஏலத்தில் தரமான சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 39.75, இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ. 30.65 க்கும் விலை போனது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.18 லட்சத்து 85 ஆயிரத்து 987 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G