வெள்ளக்கோவிலில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 17th April 2019 09:03 AM | Last Updated : 17th April 2019 09:03 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலையொட்டி வெள்ளக்கோவிலில் காவல் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதை உணர்த்தும் வகையில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய அணிவகுப்பு கரூர் சாலை, நான்கு சாலைச் சந்திப்பு, முத்தூர் சாலை வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் காங்கயம், வெள்ளக்கோவில், ஊத்துக்குளி காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், ஆயுதப் படைக் காவலர்கள் உள்ளிட்ட 300 பேர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை காங்கயம் காவல் ஆய்வாளர் ரவிகுமார், வெள்ளக்கோவில் ஆய்வாளர் ஜெயபாலன் ஆகியோர்
செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...