யோகா போட்டி: படியூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 04th August 2019 11:15 AM | Last Updated : 04th August 2019 11:15 AM | அ+அ அ- |

திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற யோகா போட்டியில் காங்கயம் அருகே படியூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் வளர்ச்சிக் கழகம், திருப்பூர் மாவட்ட யோகா பெடரேஷன் ஆகியவை இணைந்து திருப்பூர் பெம் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றன.
இதில் வயது வாரியாக நடந்த போட்டியில் காங்கயம் அருகே படியூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவர்கள் பி.சுபாஷ், எம்.ஜெயஸ்ரீ, எஸ்.நந்துஷா, எஸ்.தணுஸ்ரீ, சி.நிதர்சனா ஆகியோர் பரிசுகள் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற இந்த மாணவர்களுக்கு திருப்பூர் மாவட்ட யோகா பெடரேஷன் செயலாளர் அன்புதம்பி பதக்கங்களையும், தகுதிச் சான்றிதழையும் வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பானுஸ்ரீ கார்த்திகா, யோகா ஆசிரியர் காங்கேயம் காளியப்பன், ஆசிரியர்கள் பாராட்டினர்.