மது விற்பனை: 4 பேர் கைது
By DIN | Published On : 06th February 2019 06:52 AM | Last Updated : 06th February 2019 06:52 AM | அ+அ அ- |

திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், புதுப்பாளையம் டாஸ்மாக் கடை அருகே மதுபானம் விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியைச் சேர்ந்த கே.மகேந்திரன் (48), போயம்பாளையம் பிரிவு பூலுவபட்டியைச் சேர்ந்த ஆர்.மலைபெருமாள் (49), மதுரை மாவட்டம், மேலன்னதோப்புவைச் சேர்ந்த எம். பாலகிருஷ்ணன்(23), ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையைச் சேர்ந்த தென்னரசு (20) ஆகிய 5 பேரை திருப்பூர் மது விலக்கு காவல் துறையினர் திங்கள்கிழமை செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் ரொக்கம், 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...