இருசக்கர வாகனம் மீது வேன் மோதி ஒருவர் சாவு
By DIN | Published On : 12th February 2019 06:46 AM | Last Updated : 12th February 2019 06:46 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே படியூரில் இருசக்கர வாகனம் மீது மோதிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள படியூரைச் சேர்ந்தவர் குணசேகரன் (28). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இவர், படியூர் அருகே இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த குணசேகரன், வேன் ஓட்டுநர் பாலசுப்பிரமணி, 5 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், குணசேகரன் உயிரிழந்தார்.
இது குறித்து காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.