பல்லடம்: விபத்துகளில் இருவர் சாவு
By DIN | Published On : 12th February 2019 06:48 AM | Last Updated : 12th February 2019 06:48 AM | அ+அ அ- |

பல்லடம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.
திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்தவர் சரவணன் மகன் நித்யானந்தன் (25) . இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் ஆகப் பணியாற்றி வந்துள்ளார்.
தனது மோட்டார் பைக்கில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தார். பல்லடம் அருகே மாதப்பூரில் எதிரே வந்த கார், இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நித்யானந்தன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார்.
மற்றொரு சம்பவம்: பல்லடம் தெற்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பையா ஆசாரி மகன் சுப்பிரமணியன் (70). பல்லடம் - மங்கலம் சாலையில் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சென்றபோது அவ்வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்துகள் குறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.